பஞ்சதீர்த்த அபிஷேகம்..அருள்மிகு காயத்ரி பஞ்சமுக பூங்குழலி மாரியம்மன் திருக்கோயில்.!
Today special panchatherthamman kovil
இந்த கோயில் எங்கு உள்ளது?
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் என்னும் ஊரில் அருள்மிகு காயத்ரி பஞ்சமுக பூங்குழலி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கோயம்புத்தூர் உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் சுந்தராபுரம் உள்ளது. இங்கிருந்து மதுக்கரை ரோட்டில் உள்ள காமராஜர் நகரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து வசதி உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
மாரியம்மன் ஸ்தாபிதம் செய்து காவிரியின் தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டதால் காயத்ரி ரூபமாக அருள்பாலித்து வருகிறாள் என்பது சிறப்பு.
கிழக்குதிசை நோக்கி ராஜவிநாயகர், பாலமுருகன், கன்னிமூல கணபதி, சாந்தலிங்கேஸ்வரர், லட்சுமி நாராயண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருப்பணசாமி, கன்னிமார் தெய்வம், வேட்டைக்காரசாமி, நவகிரகங்கள் அமைந்துள்ளன.
வேறென்ன சிறப்பு?
அம்மனை கருவறையில் பிரதிஷ்டை செய்ய வந்த ஸ்ரீலஸ்ரீ காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் அம்மனுடைய வடிவமைப்பை பார்த்து அம்மன் காயத்ரியின் ரூபமாக இருப்பதால் அம்மனுக்கு காயத்ரி பஞ்சமுக பூங்குழலி மாரியம்மன் என பெயரிட்டார்.
மார்கழி சிறப்பு விரத வழிபாடும், விரதம் மேற்கொண்டு பஞ்சதீர்த்தம் கொண்டுவருதலும் இத்திருக்கோயிலின் சிறப்பு.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
பிரதி வருடம் தைமாதம் 2ம் நாள் பஞ்சதீர்த்த அபிஷேகம், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அம்மன் பூச்சாட்டுதல் மற்றும் திருக்கல்யாணம் ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன.
சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், ஏகாதசி, பூச நட்சத்திர வழிபாடு, நவராத்திரி சிறப்பு பூஜைகள் (கொலு வைத்தல்), ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பாள்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமணத்தடை மற்றும் புத்திர தோஷம் நீங்க, அம்மை போட்டவர்களுக்கு சீக்கிரம் நிவாரணம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
திருவிழா காலங்களில் காவிரி மற்றும் ஐந்து தீர்த்தங்கள் கொண்டு வந்து, பக்தர்கள் நேரடியாக அம்மனுக்கு அபிஷேகம் செய்தல், பூச்சாட்டுதல், அக்னி சட்டி எடுத்தல், பால்குடம், சக்தி கரகங்கள் எடுத்து வருதல், அழகு போட்டு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special panchatherthamman kovil