லிங்கத்திருமேனியாக அழகுற காட்சித்தரும்.. அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில்...!! - Seithipunal
Seithipunal


இந்த கோயில் எங்கு உள்ளது?

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செப்பறை என்னும் ஊரில் அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

திருநெல்வேலியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில், ராஜவல்லிபுரம் செல்லும் வழியில் செப்பறை உள்ளது. தேசியச் சாலையை ஒட்டியவாறு இக்கோயில் உள்ளதால் மாநகரத்தில் எந்த பகுதியில் இருந்தும் எளிதில் இந்தக் கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளது. செப்பறையிலிருந்து நடந்து செல்லும் தொலைவிலே இக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

செப்பறை கோயில் நடராஜர் சிலை உலகின் முதல் நடராஜர் சிலையாக கருதப்படுகிறது.

இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரான 'வேண்ட வளர்ந்தநாதர்" சுயம்பு மூர்த்தியாக முக்கிய சன்னதியில் இருக்கிறார். இவரே 'நெல்லையப்பர்" எனப்படுகிறார்.

கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத்திருமேனியாக அழகுற காட்சித் தருகிறார் நெல்லையப்பர். இவருக்கு நாகாபரணம் அணிவித்து விசேஷ காலங்களில் அலங்காரம் செய்யப்படும்.

வேறென்ன சிறப்பு?

திருக்கோயில் வாயிலை கடந்து உள்ளே சென்றால் அதிகார நந்தி மற்றும் சூரியபகவான் சன்னதி உள்ளது. அடுத்து கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியோரை தரிசிக்கலாம்.

கருவறைக்கு வெளியே ஒரு புறம் விநாயகரும், மறுபுறம் சுப்பிரமணியரும் துவாரபாலகர்களோடு காட்சித் தருகிறார்கள்.

நெல்லையப்பர் சன்னதிக்கு இடதுபுறம் தெற்கு நோக்கிய கருவறையில் ஒரு கரத்தில் மலர் தாங்கி, மற்றொரு கரத்தை தொங்கவிட்டு, சற்றே இடையை நெளித்து நின்ற கோலத்தில், புன்சிரிப்பு மிளிர காட்சித் தருகிறாள் அம்மை காந்திமதி.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது?

ஆனி தேர்த்திருவிழாவுடன் கூடிய அழகிய கூத்தர் திருவீதி உலா வரும் வைபவமும் மிகவும் சிறப்பு.

இங்கு முக்கிய விழாக்களாக மகாசிவராத்திரி, பிரதோஷம் போன்றவை சிறப்பாக நடைபெறும்.

இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க செப்பறை நடராஜரை வேண்டிக் கொள்ளலாம்.

கலைநயத்தில் ஆர்வம் உள்ளவர்கள், கல்வியில் சிறந்து விளங்க இந்த நடராஜரை வழிபடலாம்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இங்கு வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today special sepparai natarajar temple


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->