திருப்பரங்குன்றத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய தெப்பத்திருவிழா.! - Seithipunal
Seithipunal


தமிழ்க்கடவுள் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் முருகப்பெருமான். இவருடைய முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில், கொண்டாடப்படும்  திரு விழாக்களில் தெப்ப திருவிழா மிகவும் புகழ் பெற்றது. இந்த திருவிழா ஒவ்வொரு வருடமும் தை மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். 

அதன் படி, இந்த வருடத்திற்கான தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது, உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணியசுவாமி மனைவி தெய்வானையுடன் பல்லக்கில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளித்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 

இந்த விழாவில், தினமும் காலையில் சுவாமி தெய்வானையுடன் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்னம், சேஷ, தங்க மயில் மற்றும் பச்சைக் குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் அளிப்பார். 

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா வருகிற 31-ந்தேதி காலை நடைபெறுகிறது. அப்போது சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளித்து வலம் வருவார்.

இதைத்தொடர்ந்து, இரவு தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குவார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today thiruparangundram murugan temple flag ceremony at theppa thiruvizha start


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->