பாஜகவுடன் கூட்டணி மட்டும் தான்.. ஆட்சி கிடையாது - அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை திட்டவட்டம்.!!
admk mp dhambidurai press meet about admk bjp aliance
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறிய விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்திற்கு அதிமுகவை சேர்ந்தவர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது. அ.தி.மு.க. தலைமையில் தான் ஆட்சி என்று அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது:-

"வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் அ.தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடந்ததில்லை. இனியும் நடக்கப்போவதில்லை. காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி போன்றவர்களும் கூட்டணி ஆட்சி அமைத்ததில்லை.
பா.ஜ.க.வுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி அல்ல என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வரும் 2026 தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி போட்டியிட்டு அ.தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும். பொதுக்குழு செயற்குழுவை கூட்டித்தான் முடிவு செய்யப்படும் என்றுத் தெரிவித்தார்.
English Summary
admk mp dhambidurai press meet about admk bjp aliance