தருமபுரி: பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்!
Dharmapuri pennakaran People scheme
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், சுஞ்சல்நத்தம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி முன்னிலையில் இன்று வழங்கினார்.
உடன் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் .காயத்ரி, பென்னாகரம் பேரூராட்சித்தலைவர் வீரமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.என்.பி.இன்பசேகரன், பென்னாகரம் வட்டாட்சியர் பிரசன்னா, கைம்பெண் நலவாரிய உறுப்பினர் .ரேணுகாதேவி மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் இருந்தனர்.

இதேபோல், தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி மற்றும் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .ரெ.சதீஸ் நேரில் பார்வையிட்டு, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள், அவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரம், உணவின் தரம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.

English Summary
Dharmapuri pennakaran People scheme