நாளை போகிப் பண்டிகை.. காப்புக் கட்ட உகந்த நேரம் இது தான்.!
Tomorrow bogi of 2023
ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தின் கடைசி நாளை போகிப் பண்டிகையாக கொண்டாடுகிறோம். வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை தூக்கி எறிந்து வீட்டை சுத்தப்படுத்தி அசுத்தங்களை போக்கும் காரணத்தால் அதற்கு போகிப் பண்டிகை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு வீட்டில் புது வர்ணங்கள் பூசி புதுப்பொலிவுடன் மாலைகள் கட்டி, இறைவனை வழிபடுவார்கள். மேலும், அரிசி கோலமிட்டு வீட்டை அழகு படுத்துவது தமிழர்களின் பண்பாடு.
போகிப் பண்டிகையில் வீட்டில் காப்பு கட்டும் பழக்கம் இருக்கிறது. தை திருநாளை வரவேற்கும் பொருட்டு வீட்டின் கூரையில் காப்பு கட்டிய பின், பொங்கல் கொண்டாட்டம் துவங்கும்.
இதன் முக்கிய நோக்கம் ஆரோக்கியம், பாதுகாப்பு கிடைப்பதற்காகத்தான்.
வேம்பு இலை, ஆவாரம்பூ, மாவிலை, பூளைப்பூ உள்ளிடவற்றை சேர்த்து காப்பு கட்டுவார்கள். அந்த வகையில் நாளை காப்பு கட்ட உகந்த நேரம் குறித்து பார்க்கலாம்.
காலை 07:35 முதல் 08:05 வரை கட்டலாம்.
அதன் பின் காலை 11 மணி முதல் 1:30 மணி வரை கட்டலாம்.
மாலை 05 : 30 மணி இருந்து 06: 35 வரை கட்டலாம். வீட்டை பொங்களுக்காக சுத்தம் செய்யும்போது தேவையற்ற பொருட்களை ஒதுக்கி வைப்பார்கள்.
அதை போகி நாளில் டீயில் போட்டு கொளுத்துவார்கள். அப்போது மேளம் அடித்து குழந்தைகள் விளையாடுவார்கள்.
விளைச்சல் முடிந்த பின்னர் மகிழ்ச்சிகரமாய் இருக்கவும் தீய எண்ணங்களை தீயிட்டு கொளுத்துவதுமே இந்த போகிப் பண்டிகையின் நோக்கமாகும்.