வீட்டிலும், வியாபாரத்திலும்.. செல்வம் கொழிக்க செய்யும் வாஸ்து பொருட்கள்.!
Vasthu horse and Vasthu fish
வாஸ்து மீன் :
தற்போதைய காலக்கட்டத்தில் மீன் இல்லாத வீட்டையே காண முடியாது. அலுவலகத்திலும், வியாபாரம் செய்யும் இடங்களிலும், வீட்டிலும் மீன் இருப்பதை பார்த்திருப்போம். ஏனென்றால், அனைவரின் வீடுகளிலும் வண்ணமயமான மீன் தொட்டிகள் காணப்படுகிறது.
வாஸ்து படி, வீட்டில் மீன் வளர்ப்பது அல்லது சிலை வைப்பது இரண்டும் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
வீட்டில் மீன் வளர்க்க முடியாவிட்டால், மீன் சிலைகளை வீட்டில் வைத்திருக்கலாம். அதன் விளைவு சமமானதாக கருதப்படுகிறது. நீங்கள் மீன்களை வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைக்கவும்.
உங்கள் வீட்டிற்குள் வரும் அனைவரும் உங்கள் நல்வாழ்வை விரும்புகிறார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் பொறாமை கொண்டவர்களாகவும், இன்னும் சிலர் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள்.
இம்மாதிரியான சூழ்நிலையை எதிர்கொள்ள உங்கள் வீட்டில் நிச்சயம் வாஸ்து மீன் இருக்க வேண்டும். இது வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் கவனத்தை ஈர்த்து கண் திருஷ்டி, எதிர்மறை தாக்கத்தை தடுக்கிறது. வீட்டிலும், வியாபாரத்திலும் பணத்தை ஈர்க்கும் சக்தியாக செயல்படுகிறது.
வாஸ்து குதிரை :
ஏராளமான வாஸ்து பொருட்களில் முக்கியமானது ஓடும் குதிரை. ஓடும் குதிரை என்பது வலிமை, வேகம் ஆகியவற்றை குறிப்பதால் தொழில் வாழ்க்கையில் வெற்றி, பதவி உயர்வு போன்றவற்றை விரும்புபவர்கள் ஓடும் குதிரையை வீட்டில் வடக்கு திசை நோக்கி வைத்திருப்பது மிகவும் நல்லது என சொல்லப்படுகிறது.
நீங்கள் பணத்தை நோக்கி ஓடு கொண்டிருப்பவராக இருந்தால் ஓடும் குதிரையை தென்புறமாக வைப்பது நல்ல பலன்களைக் கொடுக்கும். ஓடும் குதிரை வாழ்க்கையின் வேகத்தையும், வளர்ச்சியையும் சித்தரிக்கின்றன.
வியாபாரத்தில் வளர்ச்சியை தேடுபவர்கள் அல்லது புதிய தொழிலை தொடங்க திட்டமிடுபவர்கள் வாஸ்து குதிரையை வாங்கி வைப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
வீட்டில் கணவன்-மனைவி ஒற்றுமை மேம்படவும், பெண்களுக்கு மனதிற்கு பிடித்த வரன் அமையப் பெறவும், ஆண்களுக்கு நல்ல குணமுடைய மனைவி அமையவும் சுக்கிரனை வழிபட்டால் நல்ல பலன் கைகூடும். சுக்கிரனுடைய வாகனமாக குதிரை இருப்பதால் குதிரைகள் உருவத்தை வீட்டில் வாங்கி வைப்பது இன்னும் சிறந்த பலன்களை தரும்.
English Summary
Vasthu horse and Vasthu fish