திருப்பதியில் விஐபி தரிசனத்தை குறைக்க வேண்டும்!...கோவிந்தா நாமம் மட்டுமே கேட்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அதிவிமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஆந்திர மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக திருமலைக்கு வந்துள்ளார்.

தொடர்ந்து,  மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க சந்திரபாபுநாயுடு பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக சென்று கோவிலுக்குள் நுழைந்து, மூலவர் ஏழுமலையானிடம் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தும், தங்கக்கொடிமரத்துக்கு மாலை அணிவித்தும்  சாமி தரிசனம் செய்தார்.

இந்த நிலையில், திருப்பதி பத்மாவதி விருத்தினர் மாளிகையில் தேவஸ்தான அதிகாரிகளுடன்  சந்திரபாபு நாயுடு ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பிரசாதங்களின் தரத்தை தொடர்ந்து சோதனை செய்ய தேவஸ்தானத்திற்கு அறிவுறுத்திய அவர், திருப்பதி கோவிலில் விஐபி தரிசன கலாசாரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் திருமலையில் கோவிந்தா நாமம் என்பதை தவிர வேறு எந்த வார்த்தையும் கேட்கக்கூடாது என்று கருத்து தெரிவித்த அவர், திருமலை வனப்பரப்பை 72 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VIP darshan should be reduced in tirupati only govinda naam should be heard chandrababu naidu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->