பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன.? அந்த நேரத்தில் எழுந்தால் இவ்வளவு நல்லதா.?.! - Seithipunal
Seithipunal


தினமும் அதிகாலை 3:00 மணி முதல்  5:30 மணிக்கு இடைப்பட்ட காலத்தை பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கிறோம். இந்த நேரத்தில் படிப்பு தியானம், வழிபாடு என எந்த நல்ல காரியங்களைச் செய்தாலும் அந்த காரியம் வெற்றி அடையும் என்பது ஐதீகம்.

படைத்தலுக்கு பிரம்மாவும், காத்தலுக்கு விஷ்ணுவும், அழித்தலுக்கு சிவனும் என  மும்மூர்த்திகள் இருந்தாலும் உலகம் முழுவதும் சிவ வழிபாடும் விஷ்ணு வழிபாடும் வியாபித்திருக்கிறது. ஆனால் பிரம்மாவிற்கு என்று எந்தவித வழிபாடுகளும் இல்லை. அவருக்கென்று முகூர்த்தம் மட்டுமே இருக்கிறது.

முகூர்த்த நேரம் நல்ல நேரம் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தை குறிப்பிட்டாலும் அதிகாலையில் 3:00 மணி முதல் 5:30 வரையிலான நேரத்தை  பிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிட்டுச் சொல்கிறோம். இதற்கு அறிவியல் ரீதியான காரணங்களும் இருக்கின்றன. இந்த நேரத்தில் தான் சூரியன் தனது உஷ்ணத்தையோ சந்திரன் தனது குளுமையையோ, முழுமையாக வெளியிடாது. மேலும் இந்த நேரத்தில் நமது உடல் இயக்கங்கள் சீராக இருப்பதோடு மனமும் அமைதியாக இருக்கும். இதனால் நமது உடல் மற்றும் மனம் சீராக வைத்திருக்க இந்த நேரம் உதவுகிறது.

ஒவ்வொரு நாளும் இரவில் தூங்கி காலையில் கண்விழிப்பதே இறைவன் நமக்கு கொடுத்த வரம் என்ற நன்றியுடன்  அதனை நினைத்துப் பார்ப்பதற்காகவே  இது பிரம்மாவிற்கான நேரம் என்பதால்  பிரம்ம முகூர்த்தம் என்று  சிறப்பாக வழிபடுவதாக முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What is Brahma Mukurtam and why is it so special


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->