எந்தெந்த பொருட்களை இரவில் கடனாக கொடுக்க கூடாது - முன்னோர்கள் போட்ட வழிமுறை என்ன?
which things not provide in night
நம் முன்னோர்களின் பாரம்பரிய முறைகள் இன்றவுளம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நம் முன்னோர்கள் எதை செய்தாலும் சொன்னாலும் அதில் கண்டிப்பாக காரணம் ஒன்று ஒளிந்திருக்கும். அவற்றில் ஒன்றுதான் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் மற்றும் கடன் இரவில் கொடுக்க கூடாது என்பது. அப்படி நாம் என்னென்ன பொருட்களை இரவு நேரத்தில் கொடுக்கக் கூடாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
* நூல், எண்ணெய், காசு, தயிர், இரும்பு பொருட்கள், அரிசி உள்ளியூட்டவற்றை அக்கம்பக்கத்தினருக்கு கடனாக கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தால் வீட்டில் உள்ள மகிழ்ச்சி போய்விடும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, அரிசி சுக்ரனுடன் தொடர்புடையதால் அரிசியை கடன் கொடுக்கும்போது சுக்ர தோஷம் ஏற்படும். இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்படும்.
* சனிக்கிழமைகளில் சனி பகவானுடன் தொடர்புடைய கடுகு எண்ணெய், எள் போன்ற பொருட்களை இந்தக் காரணத்தைக் கொண்டும் பக்கத்து வீட்டுக்காரருக்கு கடன் கொடுக்கக் கூடாது. அதேபோல், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை கடன் கொடுக்கக்கூடாது. குறிப்பாக வியாழன் கிரகத்தோடு தொடர்புடைய மஞ்சளை கடன் கொடுக்கும்போது குரு தோஷம் உண்டாகும். மேலும், கேதுவுடன் தொடர்புடைய பூண்டு, வெங்காயத்தை இரவில் கடனாகக் கொடுக்கும் போது வீட்டில் செழிப்பு நின்று விடும். அதுமட்டுமல்லாமல், மகாலக்ஷ்மியுடன் தொடர்புடைய உப்பை கடனாக கொடுத்தால் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
* பயன்படுத்திய செருப்பு, துணிமணிகள், பூஜை பொருட்களை மற்றவருக்கு கடனாக கொடுக்கக்கூடாது. துடைப்பத்தை கண்டிப்பாக யாருக்கும் தரக்கூடாது. இது வீட்டில் பணப்பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
English Summary
which things not provide in night