விசுவாவசு ஆண்டு; எந்த எந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்..? விரயங்கள் ஏற்படும்..? - Seithipunal
Seithipunal


சித்திரை மாதம் 1-ந் தேதி (14.4.2025) திங்கட்கிழமை அன்று தமிழ் புத்தாண்டு வருகிறது. 'விசுவாவசு' என்று அழைக்கப்படும் இந்த  ஆண்டின் தொடக்கத்தில் குரு - சுக்ர பரிவர்த்தனை, யோகம் தரும் விதத்தில் உள்ளது. 

அத்துடன், புதன் நீச்சம் பெற்று, உச்சம் பெற்ற சுக்ரனோடு இணைந்து நீச்ச பங்க ராஜயோகத்தை தரப்போகிறார். ராஜகிரகமான சூரியனும், சந்திரனும் சப்தம பார்வையாகப் பார்க்கிறார்கள். மேலும், சனி கும்பத்தில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். இதில், சனி - செவ்வாய் பார்வைக் காலத்திலும், சனி - செவ்வாய் சேர்க்கை காலத்திலும் கவனமாக செயல்பட வேண்டும்.

புத்தாண்டு தொடக்கத்தில் சுக்ரன் உச்சம் பெறுகிறது. இதனால், கலை, நாட்டிம், இசை, கல்வி, விஞ்ஞானம், ஜவுளி, ஜோதிடம், பத்திரிகை போன்ற துறைகளில் வளர்ச்சி ஏற்படும். அத்தோடு, குருவின் பார்வையால் கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய மூன்று ராசிகளும் புனிதமடைகின்றன. 

11.05.2025 அன்று குருப் பெயர்ச்சிக்குப் பிறகு மிதுன குருவின் சஞ்சாரத்தால் துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் புனிதமடைகின்றன.இந்த ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும், தொழில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

08.10.2025 அன்று குருபகவான், கடக ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். இதனால், ஆண்டின் தொடக்கத்தில் கடக ராசிக்கு அஷ்டமத்துச் சனியும், சிம்ம ராசிக்கு கண்டகச் சனியும், மகர ராசிக்கு பாதச் சனியும், கும்ப ராசிக்கு ஜென்மச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மீன ராசிக்கு விரயச் சனியும் நடைபெறுகிறது.

ஆகவே, வாக்கிய கணித ரீதியாக 06.03.2026 அன்று சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது. ஆனால் இந்த பெயர்ச்சி நடைபெறுவதற்கு ஒரு சில மாதங்கள் முன்பாகவே நற்பலன்கள் வரத்தொடங்கும். இருந்தாலும், ஒருவருடைய சுய ஜாதக அடிப்படையில் யோக பலம் பெற்ற நாளில் தெய்வ வழிபாடு செய்துவந்தால்,உங்களுக்கு வரும் விரயங்கள் வாசலோடு நிற்கும். 

இந்த சித்திரை தமிழ் புத்தாண்டின் தொடக்க நாளில் விநாயகர், சிவன், அம்பிகை, விஷ்ணு, சரஸ்வதி, லட்சுமி, அனுமன், பைரவர், நவக்கிரகம், இஷ்ட தெய்வம், குலதெய்வம் ஆகியவற்றில் எதாவது ஒரு தெய்வத்தை வழிபட்டு இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய பிரார்த்தனை செய்வது அனைவருக்கும் நன்மை பயக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Which zodiac signs will lose everything they touch in the year of Visvavasu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->