பலருக்கும் தெரியாத ரகசியம்; '108' எண் இவ்வளவு அற்புதங்கள் நிறைந்ததா? - Seithipunal
Seithipunal


பொதுவாகவே இந்து மாதத்தில் கூறப்பட்டுள்ள சில ஆன்மிகம் சார்ந்த விடயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்த கூடியவை. கூர்ந்து கவனித்தால் அதில் பல ஆச்சரியங்களும், விஞ்ஞானமும் கலந்து இருக்கும். 

இந்த 108  எண் பொதுவாகவே பார்த்தீர்கள் என்றால் உடனடி அவசர தேவைக்கு போலீஸ்- க்கு அழைப்பதற்கு, மருத்துவ ஆம்புலன்ஸ் வண்டிகளுக்கு என 'சீக்கிரம் 108-க்கு அழைங்கப்பா' என்று சொல்லுவோம் இல்லையா? இப்படி பெறுமதி மிக்க இந்த 108 எண், இந்து மதம் மட்டுமின்றி பல மதங்களிலும் ஆன்மிக ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது எப்படி, ஏன் என்பதை இந்த பதிவில் நாங்கள் விபரமாக பார்க்கலாம்.

07 மற்றும் 09 என்ற எண்கள் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்புடையதும், ஈர்ப்பு தன்மையும், தனித்துவமான ஆற்றல் கொண்ட எண்களாக கருதப்படுகின்றன. இவற்றின் 108, 1008 என்ற எண்கள் தெய்வீக தன்மை கொண்டதாக சொல்லப்படுகிறது.

ஆன்மிகத்தில் தெய்வீக தன்மை கொண்டதாகவும் கருதப்படும் எண் 108. மந்திரங்கள் சொல்வதரற்காக, சுவாமி மற்றும் கோவிலை வலம் வருவதற்கு, விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவதற்கு என பல விதமான வேண்டுதல்களை 108 என்ற எண்ணிக்கையில் நிறைவேற்றுவது பல மடங்கு அதிகமான பலனையும், விரைவான பலனையும் தரும் என்று ஆன்மீக பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம். நாமும் அதனை செய்வோம். அப்படி இந்த 108 என்ற மந்திர எண்ணின் மகிமைகள் என்ன இருக்கு? என்று அடுத்து பார்க்கலாம்.

108 எண்ணின் மகிமைகள் :

ருத்திராட்ச மாலை அல்லது வேறு எந்த மணி மாலையானாலும் 108 மணிகளால் கோர்க்கப்பட்டிருப்பது.

இது இந்து மதத்தில் மட்டுமின்றி, புத்த மதம், ஜெயின மதம், சீக்கிய மதம் ஆகியவற்றிலும் இந்த 108 மணிகள் கொண்ட மாலைகள் சிறப்புடையதாக கருதப்படுகிறது. எந்த மந்திரத்தையும் 108 முறை ஓதினால் தான் அதன் பலன் தெரியும் என்று சொல்வதோடு, ஜப்பானில் உள்ள ஜென் கோயில்களில் 108 முறை கோயில் மணியை ஒலிக்கச் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக இந்து மத வழியில் வந்த சித்தர்கள் கணித வல்லுனர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதற்கான சில உதாரணங்களை கீழே பார்க்கலாம்.

1. எண் 9 முழுமையை குறிக்கும் எண். எண் 108ஐ கூட்டினால் 1+8=9 வரும், 108ம் முழுமையை குறிக்கிறது. அதே போல் 9துடன் எந்த எண்னை பெருக்கினாலும் வரும் விடையை கூட்டிப் பார்த்தால் 9 வரும் 1x9=9. 2x9=18. 1+8=9. 285x9=2565 2+5+6+5=18 1+8=9. 8543x9=76887 7+6+8+8+7=36 3+6=9. அதாவது 9 என்கிற எண் கடவுள் நிலையை, ஒரு முழுமையை குறிக்கும் எண்.

2. 9 கிரகங்கள் 12 ராசிகளில் பயணிக்கும் நிலை இருப்பை ஒரு முழுமையை குறிக்கிறது 9 x 12 = 108.

3. மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுக்கும் 4 பாதம் வீதம் மொத்தம் நட்சத்திரங்களுக்கு 108 பாதங்கள் 27 x 4 = 108.

4. வேதகால புத்தகங்களின் படி பிரபஞ்ச‌த்தில் உள்ள கனிமங்களின் எண்ணிக்கை 108. இப்பொழுது இன்னும் சில கனிமங்கள் உள்ளதாக கண்டு பிடித்திருக்கிறார்கள்.

5. கணித்தில் 1,2 மற்றும் 3 ஆகிய எண்களின் ஆற்றல் பற்றிய உண்மை எண் 1க்கு ஆற்றல் 1. எண் 2க்கு ஆற்றல் 4 (2x2). எண் மூன்றிர்க்கு ஆற்றல் 27 (3x3x3). இந்த மூன்றையும் (1x4x27) பெருக்கினால் வரும் மொத்த ஆற்றல் 108. இது தான் பிரபஞ்ச ஆற்றல். எண் 1 ஒரு பரிமாண ஆற்றலையும், எண் 2 இரண்டு பரிமாண ஆற்றலையும், எண் 3 முப்பரிமாண ஆற்றலையும் குறிக்கிறது.

6. சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 108 சந்திரன்களை வரிசையாக அடுக்கி வைத்தால் எவ்வளவு தூரம் வருமோ அவ்வளவு தான்.

7. சூரியனின் விட்டம் சரியாக பூமியின் விட்டத்தை விட 108 மடங்கு அதிகம்.

அதாவது 108 என்கிற எண் ஒரு முழுமையான மொத்த பிரபஞ்சத்தையும், அதன் ஆற்றலையும், அறிவையும் குறிக்கும். அதாவது கடவுள் தன்மையை குறிக்கும் எண்ணாகும். இந்த 108 என்கிற எண் முழுமையை குறிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why is 108 important in the universe


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->