டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த முகம்மது ஷாமி.!
200 Test wickets for Shami
இந்திய அணி தென்ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இரண்டாவது நாள் மழையின் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
மூன்றாவது நாள் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 327/10 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அடுத்தடுத்து, தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து 197/10 ரன்னுக்கு அவுட் ஆனார். அதிகபட்சமாக முகம்மது ஷாமி 5 விக்கெட்டை வீழ்த்தினார். பும்ரா மற்றும் தாகூர் 2 விக்கெட்களை வீழ்த்தினர். சிராஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்நிலையில், இந்த 5 விக்கெட் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200வது விக்கெட்டை வீழ்த்தினார் முகம்மது ஷாமி. குறைந்த பந்துகளில் 200 விக்கெட் இலக்கை எட்டிய இந்திய பவுலர் என்ற சாதனையையும் வசமாக்கினார். 9896 பந்துகளில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
English Summary
200 Test wickets for Shami