அந்த வரலாற்றுச் சம்பவம் இந்த உலகோப்பையிலிலும் நடக்குமா? மறக்குமா நெஞ்சம்!
2019 ICC WC NZ vs ENG final
கிரிக்கெட்டை கண்டுபிடித்தது இங்கிலாந்தாக இருந்தாலும் உலகக் கோப்பையை ஒருமுறைதான் வென்றுள்ளது. அதுவும் கடந்த 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பவுண்டரிகள் மூலம் சேம்பியன் பட்டம் வென்று இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை ஒன்றையும் புரிந்தது.
இந்த 2019 உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து, நியூஸிலாந்து, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு தொடராக என்றும் நினைவில் இருக்கும்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 6 வெற்றி, ஒரு தோல்வி என 15 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரை இறுதி சுற்றில் நுழைந்தது.
அரை இறுதியில் நியூஸிலாந்திடம் இந்திய அணி துர்திஷ்ட்டவசமாக தோல்வி அடைந்தது. மழை குறுக்கீடும், தோனியின் ரன் அவுட்டும் இந்திய அணியின் தோல்விக்கு வித்திட்டது என்று சொன்னால் மிகையாகாது. மேலும், இந்த ஆட்டம் தான் மகேந்திர சிங் தோனி கடைசியாக ஆடிய ஆட்டம்.
கோப்பைக்கான இறுதிப் ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆட்டம் டை ஆனது.
சேம்பியனை தீர்மானிக்க வீசப்பட்ட சூப்பர் ஓவரில், முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியும் 15 ரன்கள் சேர்க்க ஆட்டம் மீண்டும் டை ஆனது.
இது என்னடா சோதனை என்று ரசிகர்கள் தலையில் கைவைக்க, அப்போதுதான் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக சேம்பியனை தேர்ந்தெடுக்கும் புதிய விதி அமல்படுத்தப்பட்டது.
அதாவது, எந்த அணி அதிக பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்துள்ளதோ, அந்த அணிதான் சேம்பியன் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி, 22 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசிய இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நியூஸிலாந்து அணி வெறும் 14 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் மட்டுமே அடித்திருந்தது.
பவுண்டரி, சிக்ஸர்கள் எண்ணிக்கையின் மூலம் சாம்பியன் பட்டம் கொடுக்கப்பட்டதை இங்கிலாந்து அணியை தவிர வேறு எந்த நட்டு ரசிகர்களும் ஏற்று கொள்ளவில்லை.
ஆனால், 9 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆட்டத்தை மேலும் நடத்தினால் அது நியாயமாக இருக்காது என்ற குரலும் ஆதரவாக வந்தது.
இந்த 2023 உலக கோப்பை தொடரில், இதுபோல எந்த இரு அணிகளுக்கு இடையே, இப்படி நடக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
English Summary
2019 ICC WC NZ vs ENG final