2021.. கடந்து வந்த பாதை.. விளையாட்டுகள் ஓர் பார்வை.!
2021 history sports
2021... கடந்து வந்த பாதை
விளையாட்டுகள் - ஓர் பார்வை (பகுதி - 3)
ஜூன் - 2021 துபாயில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சஞ்சீத் தங்கம் வென்றார்.
போலாந்து ஓபன் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
ஆல்-ரவுண்டர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தை பிடித்தார்.
தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான கம்பு ஊன்றி தாண்டுதலில் தமிழகத்தின் பரணிகா இளங்கோவன் முதலிடம் பிடித்தார்.
குரோஷியாவில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ராஹி சர்னோபத் தங்கப்பதக்கம் வென்றார்.
தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் வீரமணி ரேவதி 3ஆம் இடம் பிடித்தார்.
ஜூலை - 2021 விம்பிள்டன் டென்னிஸ் சிறுவர் பிரிவின் ஒற்றையர் பட்டத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த சமிர் பானர்ஜீ கைப்பற்றினார்.
பிரிட்டிஷ் கிராண்ட்பிரி கார் பந்தயத்தில், உலக சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்கேட்போர்டிங் மகளிர் பிரிவில் ஜப்பானின் இளம் வீராங்கனை மோமிஜி நிஷியா தங்கம் வென்று 13 வயதில் தங்கம் வென்ற சாம்பியன் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.
2019ஆம் ஆண்டின் சிறந்த மாற்றுத்திறனாளி வீரர் என்ற கௌரவத்தை, உலகின் நம்பர் 1 மாற்றுத்திறனாளி இறகுபந்து வீரரான இந்தியாவின் பிரமோத் பகத் அவர்கள் பெற்றார்.
ஆகஸ்ட் - 2021- டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாகியா வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் ஆடவருக்கான 65 கிலோ பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கி தந்த நீரஜ் சோப்ரா, உலக தடகள வீரர்களின் பட்டியலில் 2ஆம் இடத்தை பெற்றார்.
வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 113 பதக்கங்களுடன் அமெரிக்கா பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்றது.
செக் குடியரசு ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் சத்தியன் ஞானசேகரன் சாம்பியன் பட்டம் வென்றார்.