2021 திரும்பி பார்ப்போம்.. விளையாட்டுத்துறையில் நிகழ்ந்த சாதனைகள்.. பார்க்கலாம் வாங்க..!!
2021 sports records
இந்தியாவின் 67வது செஸ் கிராண்ட் மாஸ்டராகியுள்ளார் கோவாவை சேர்ந்த 14 வயது சிறுவன் லியோன் மெண்டோன்கா.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 6000 ரன்கள் கடந்த 6வது இந்திய வீரர் என்ற சாதனையை புஜாரா எட்டினார்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கரோலினா, ஆக்சல்சென் மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ஐ.டி.பி.பி) 10வது தேசிய ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.
13 நாட்கள் நீண்ட கேலோ இந்தியா ஜான்ஸ்கர் குளிர்கால விளையாட்டு மற்றும் இளைஞர் திருவிழா நடைபெற்றது.
கோவை கரி மோட்டார் வேகப்பாதையில் எல்ஜிபி ஃபார்முலா 4 பிரிவில், எஃப்.எம்.எஸ்.சி.ஐ. ஜே.கே.டயர் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
தடகள போட்டியில் 24 ஆண்டு கால தேசிய சாதனையை சுனில் தவார் என்ற தடகள வீரர் முறியடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
20 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் உத்தரப் பிரதேச வீராங்கனை முனிடா பிரஜாபதி புதிய தேசிய சாதனை படைத்தார்.
டென்னிஸ் போட்டியான பிலிப் ஐலண்ட் ட்ரோபியை இந்தியாவின் அங்கிதா மற்றும் ரஷ்யாவின் காமிலா வென்றனர்.
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப்பதக்கம் வென்றது.
சப்-ஜூனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரத்தின் சாயாலி வனி பட்டம் வென்றார்.
நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டெம் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ருபிலெவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியாவின் முதல் வாள்வீச்சு போட்டியாளர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
20 ஓவர் போட்டியில் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
பாட்டியாலாவில் நடைபெற்ற ஃபெடரேஷன் கப் சீனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டியில், முதலிடம் பிடித்து சாதித்திருக்கிறார் தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை எஸ்.தனலட்சுமி.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின் சௌரப் சௌத்ரி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் சிங்கி யாதவும், ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் ஐஷ்வரி பிரதாப் தோமரும் தங்கப்பதக்கம் வென்றனர்.
ஐஎஸ்எஸ்எப் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் டிரேப் குழு போட்டிகளில் இந்திய அணி 2 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியது.