மொத்தம் 20 அணிகள்.. 6 மாதத்தில் 2 உலககோப்பை தொடர்.!! ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இந்தத் தொடர் முடிந்த உடன் 6 மாதத்திற்குள் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐசிசி நடத்திய ஆலோசனை கூட்டத்தின் முடிவில் 2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஜூன் 4ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 10 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா, டல்லாஸ், நியூயார்க், மோர்சிவெயில் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. மேலும் 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை இணைக்க ஐசிசி தீவிரம் காட்டி வரும் நிலையில் அதற்கு முன்னேற்பாடாக அமெரிக்காவில் போட்டி நடத்தப்படுகிறது.

இந்தத் தொடரில் முன் எப்போதும் இல்லாத வகையில் 20 அணிகள் விளையாட உள்ளன. அதன்படி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள் தற்போது வரை தகுதி பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 அணிகள் என மொத்தம் 4 பிரிவுகளாக லீக் சுற்று நடைபெறும். அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெரும். சூப்பர் 8 சுற்றில் 2 பிரிவுகளாக 4 அணிகள் பங்கேற்கும் சூப்பர் 8 சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதி சுற்றி விளையாட உள்ளன. டி20 உலக கோப்பையில் அதிக அணிகளை விளையாட வைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவை ஐசிசி எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2024 ICC t20 cricket series date announced


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->