2024 டி20 உலகக்கோப்பை நடைமுறையில் புதிய மாற்றம் - ஐசிசி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


டி20 உலகக்கோப்பை 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 55 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2024 உலககோப்பை தொடருக்கு நேரடியாக இதுவரை 12 அடிகள் நேரடியாக முன்னேறியுள்ளன.

அந்த வகையில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

மேலும், 2022 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் 2 குரூப்பிலும் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. அதன்படி, குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, அணிகளும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகளும் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

மேலும், ஐசிசி தரவரிசை அடிப்படையில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

இதனையடுத்து ஆப்பிரிக்கா தகுதி சுற்றில் 2 அணிகள், அமெரிக்க தகுதி சுற்றில் 1 அணி, ஆசிய தகுதி சுற்றில் 2 அணிகள், கிழக்கு ஆசிய பசிபிக் தகுதி சுற்றில் 1 அணி, ஐரோப்பிய தகுதி சுற்றில் 2 அணிகள் என மொத்தம் 8 அணிகளும் இதில் பங்கேற்க உள்ளன.

2024 டி20 உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள அணிகள்

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, வங்காளதேசம், நியூசிலாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்.

புதிய நடைமுறை என்ன?

இந்த நிலையில் 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டி எந்த விதத்தில் நடைபெறும் என்பது குறித்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் மொத்தமுள்ள 20 அணிகளும் ஒரு குரூப்பிற்கு 5 அணிகள்  வீதம் 4 குழுவாக பிரிக்கப்படும். அந்த குரூப்பில் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். இதையடுத்து ஒவ்வொரு குருப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

அதனைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய 8 அணிகளும் ஒரு பிரிவுக்கு 4 அணிகள் வீதம் என இரு பிரிவாக பிரிக்கப்படும். இதில், சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். சூப்பர் 8 சுற்றின் முடிவின் அடிப்படையில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

அதனைத் தொடர்ந்து  அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2024 T20 World Cup format changes


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->