இந்தியாவின் வெற்றியில் 3 பெரிய கேம் சேஞ்சர்கள் !!
3 big game changers in team India victory
டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது. டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் வேகமான தொடக்கத்திற்குப் பிறகு, இந்திய அணி விரைவில் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதன் பிறகு களம் இறங்கிய விராட் கோலி பொறுமையாக விளையாடினார். 20 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்காவுக்கு 177 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது இந்தியா.
தென்னாப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன்களை குவித்தனர். ஒரு கட்டத்தில் ஆட்டம் இந்தியாவிடம் இருந்து வெற்றி நழுவிப் போவது போல் இருந்தது. அந்த நேரத்தில் சூர்ய குமார் யாதவ் ஒரு கேட்ச் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். 17 வது ஓவர்களுக்குப் பிறகு ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக மாறியது.
தென்னாப்பிரிக்க அணி வீரர் ஹென்ரிச் கிளாசன் அபாரமாக பேட்டிங் செய்தார். 16 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை குவித்தது. கடைசியில் 24 பந்துகளில் 26 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைமை இருந்தது. 17வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அவர் தனது முதல் பந்திலேயே கிளாசனை அவுட் ஆக்கினார். 17 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 18 பந்துகளில் 22 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.
18வது ஓவரை ஜஸ்பிரித் பும்ரா வீசினார், அவரது முதல் மூன்று பந்துகளில் ஒரு ரன் மட்டுமே கொடுத்தார். நான்காவது பந்தில் ஜான்சனை அவுட் ஆக்கினார். இந்த ஓவரில் பும்ரா 2 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். இதனால் தென்னாப்பிரிக்க அணி கடும் நெருக்கடிக்கு உள்ளானது. தென்னாப்பிரிக்க அணி வெற்றிக்கு 12 பந்துகளில் 20 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. 19வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அவர் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
20வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார், அவருக்கு முன்னால் நட்சத்திர பேட்ஸ்மேன் மில்லர் இருந்தார். அவர் 6 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைமை இருந்தது. மில்லர் முதல் பந்திலேயே பெரிய அடித்துஆடினார், ஆனால் சூர்ய குமார் யாதவ் அதை லாவகமாக தடுத்தார். சூர்ய குமார் யாதவ் கேட்ச் எடுத்தார், ஆனால் அவர் எல்லைக்கு வெளியே சென்று கொண்டிருந்தார். அவர் பந்தை எல்லைக்குள் எறிந்துவிட்டு மீண்டும் களத்திற்கு வந்து கேட்சை பிடித்தார். இந்த கேட்சுக்கு பிறகு ஆட்டம் முற்றிலும் இந்தியாவை நோக்கி திரும்பியது.
English Summary
3 big game changers in team India victory