T 20 உலகக் கோப்பை : ஐ. சி. சி வெளியிட்ட கனவு அணியில் இடம் பிடித்த 6 இந்திய வீரர்கள்..!! - Seithipunal
Seithipunal



சமீபத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவு நாடுகளில் நடந்து முடிந்த 9 ஆவது T 20 உலகக் கோப்பை போட்டித் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதையடுத்து இந்த உலகக் கோப்பை தொடரில் அனைத்து அணிகளிலும் மிக சிறப்பாக விளையாடிய வீரர்ககளை தேர்வு செய்து தனது ஐ. சி. சி. கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி) அறிவித்துள்ளது. 

ஐ. சி. சி யின் இந்த கனவு அணியில் T20 உலகக் கோப்பை போட்டியில் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்த ஐ. சி. சி. கனவு அணியின் கேப்டனாக தேர்வு செய்யப் பட்டு உள்ளார். இவர் மட்டும் அல்லாமல் மேலும் 5 இந்திய அணி வீரர்களும் இந்த ஐ. சி. சி. கனவு அணியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

ஐ. சி. சி. யின் கனவு அணியில் இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா, தஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், அக்ஷர் படேல்  ஆகியோர் இடம் பெற்றுளளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் ஐ. சி. சி வெளியிட்டு உள்ள கனவு அணியில் இடம் பெற்றுள்ள 12 வீரர்களின் விவரங்கள் வருமாறு, ரோஹித் சர்மா (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், நிக்கோலஸ் பூரன், சூர்யகுமார் யாதவ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ரஷீத் கான், தஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், பரூக்கி மற்றும் நோர்ஜே ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 Indian Players Included in ICC T20 World Cup 2024 ICC Dream Team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->