உலக கோப்பை அட்டவணையில் அதிரடி மாற்றம்.! இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போது.? முழு விவரம் இதோ.!
9 matches rescheduled by ICC for World Cup 2023
இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. அதன்படி அக்டோபர் 5 முதல் நவம்பர் 19-ம் தேதி வரை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத்தொடரில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
ஹைதராபாத், அகமதாபாத், தரம்சாலா, டெல்லி, சென்னை, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய 10 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. மொத்தம் 46 நாட்கள் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் உலக கோப்பை தொடருக்கான அட்டவணையில் சில போட்டிகளில் தேதி மாற்றம் செய்ய வேண்டும் என சில அணிகள் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்திருந்தது. இந்திய அணியும் பாகிஸ்தான் அணியுடன் விளையாடும் போட்டி தேதியை நவராத்திரி திருவிழாவை காரணம் காட்டி மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது.
அதனை ஏற்று தற்பொழுது மாற்றி அமைக்கப்பட்ட போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்தம் உள்ள 48 போட்டிகளில் 9 போட்டிகளில் தேதி மட்டும் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி,
ENG vs BAN அக்டோபர் 10
PAK vs SL அக்டோபர் 10
AUS vs SA அக்டோபர் 12
NZ vs BAN அக்டோபர் 13
IND vs PAK அக்டோபர் 14
ENG vs AFG அக்டோபர் 14
BAN Vs AFG அக்டோபர் 15
AUS vs BAN நவம்பர் 11
ENG vs PAK நவம்பர் 11
IND vs NED நவம்பர் 12 ஆகிய தேதிகளுக்கு போட்டிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
English Summary
9 matches rescheduled by ICC for World Cup 2023