புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபித்து காட்டிய.. சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்.! - Seithipunal
Seithipunal


முஸ்டாக் அலி டிராபி லீக் சுற்று போட்டியில் சச்சின் மகன் சிறப்பாக பந்து வீசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் (வயது 22) இடது கை வேகப்பந்து வீச்சாளராவார். கடந்த 2020-21 சீசனில் மும்பை அணியின் சார்பாக விளையாடிய இவருக்கு ஹரியானா மற்றும் புதுச்சேரி அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதனையடுத்து இந்த  சீசனில் மும்பையில் இருந்து விலகி கோவா அணியில் இணைந்து அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற முஸ்டக் அலி டிராபி 3ம் கட்ட லீக் சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஹைதராபாத் - கோவா அணிகள் மோதின.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓவர் வீசி வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், ஒரு மெய்டன் ஓவரையும் வீசியுள்ளார்.

ஹைதராபாத் அணியில் சிறப்பாக விளையாடிய சக மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரான திலக் வர்மாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arjun Tendulkar best bowling figure against Hyderabad


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->