இனி டெஸ்ட் ஆட்டங்களில் ஆட மாட்டேன்., கேப்டன் எடுத்த முடிவால் அதிர்ச்சில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆரோன் ஃபிஞ்ச் இனி முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட போவதில்லை என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், 

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இனி நான் விளையாட மாட்டேன். அதில் ஓர் அர்த்தமும் இல்லை. இனிமேல் நான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட போவதில்லை. உள்ளூர் அணியில் ஏராளமான இளைஞர்கள் உள்ளனர் அவருடைய இடத்தை பறிக்க நான் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், எனக்கு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மிகவும் பிடிக்கும் என்றும் டெஸ்ட் அணியில் இடம் பெற முயற்சி செய்யாத போது முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதில் அர்த்தமில்லை என்று கூறியுள்ளார்.

35 வயதான ஆரோன் ஃபிஞ்ச் ஆஸ்திரேலிய அணிக்காக 5 டெஸ்ட், 132 ஒருநாள், 88 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2018 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான ஃபிஞ்ச் அந்த வருடத்திற்கு பிறகு எந்த ஒரு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வில்லை. எனினும் தற்போது ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக உள்ளார். இவரது தலைமையில் ஆஸ்திரேலியா அணி கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aron Finch did not play 1st class cricket and test cricket


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->