ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி : இன்று இந்தியா - ஹாங்காங் அணிகள் மோதல்.! - Seithipunal
Seithipunal


15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. துபாயில் இன்று நடக்கும் 4-வது லீக் போட்டியில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. 

இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

 சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும். அதே சமயம் 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்குடன் 2 முறை மோதி இருக்கிறது. இதில் 2008-ம் ஆண்டில் 256 ரன்கள் வித்தியாசத்திலும், 2018-ம் ஆண்டில் 26 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

 இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 4வது லீக் போட்டியில் இந்தியா -ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. அதன்படி, துபாய் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asia Cup cricket India vs hongkong today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->