#Breaking | கோல்டன் டக்-அவுட்.! ஜஸ்ட் மிஸ் கோலி டக்-அவுட்.! ஆரம்பமே அதிர வைக்கும் பாகிஸ்தான்.! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை 2022 : டி20 கிரிக்கெட் தொடரின் இன்று இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. 

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரஸ்வான் நிதானமாக ஆடி 43 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பாபர் அசாம் 10 ரன்கள் தனது விக்கெட் பறிகொடுத்தார்.

பஹர் ஜமான், ஷதாப் கான் தலா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இப்திகார் அகமது அதிரடியாக ஆடி 28 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். 

கடைசி நேரத்தில் களமிறங்கிய தஹானி காட்டுத்தனமாக சுற்றி 6 பந்துகளில், இரு சிக்ஸர் உடன் 16 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. 

இதனை அடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா முதல் பந்தில் ஒரு ரன் எடுக்க, ஆட்டத்தின் இரண்டாவது பந்தை சந்தித்த கே எல் ராகுல் இன்சைடு போல்ட் ஆகி தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

தான் சந்தித்த முதல் பந்திலேயே கேஎல் ராகுல் அவுட் ஆனதால் அது 'கோல்டன் டக் அவுட்' என்று கிரிக்கெட் மொழியில் சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து ஒன் டவுன் களமிறங்கிய விராட் கோலி, முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காத நிலையில், இரண்டாவது பந்து, பேட் எட்ஜில் பட்டு ஸ்லீப்பர் இடம் சென்றது, அவர் கேச்சை தவறவிட்டால், டக்-அவுர்ட் ஆபத்திலிருந்து தப்பித்தார் கோலி.

தற்போது வரை இந்திய அணி 2.4 ஓவர்களில், ஒரு விக்கெட் இழப்பிற்கு, 13 ரன்கள் சேர்த்து ஆடி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

asia cup ind vs pak kl rahul wicket


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->