ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. கடந்த ஆண்டு இதே மைதானத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை லீக் சுற்று போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் மோசமாக தோற்றதுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. அதன்படி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை 14 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 8 போட்டிகளிவ் இந்தியாவும், 5 போட்டிகளில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. மழையால் ஒரு போட்டி முடிவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asia Cup india vs pakistan match today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->