ஆசியக் கோப்பை.. இந்திய கிரிக்கெட் அணி நாளை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இலங்கை பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. 

இந்த 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று முடிவில் 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அந்த வகையில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மற்றுமொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. 

சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 17 அன்று இறுதிப் போட்டியில் விளையாடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி தேர்வு நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் 17 பேர் கொண்ட அணியை தேர்வு செய்து அறிவிக்கின்றனர். இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அணி தேர்வில்கலந்து கொள்கின்றனர்.

மேலும், இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கும் இந்த தேர்வின் போது இந்திய அணி தேர்வு இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asia Cup Indian team squad tomorrow announced


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->