ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி.. இந்தியாவுக்கு ஒரே நாளில் மூன்று தங்க பதக்கம்.! - Seithipunal
Seithipunal


ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இன்று ஒரே நாளில் 3 இந்தியர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க நாளில் அபிஷேக் பால் இந்தியாவின் பதக்க பட்டியலை தொடங்கி வைத்தார். அதன்படி 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்றார்.

இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் போட்டிகள் நடைபெற்ற நிலையில் இந்தியர்கள் மூன்று தங்கம் என்று அசத்தியுள்ளனர். அதன்படி பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் ஜோதி யர்ராஜி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 23 வயதான ஜோதி யர்ராஜி 13.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் ஆண்களுக்கான ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அஜய்குமார் சரோஜ் தங்கம் என்றால். அதேபோல் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அப்துல்லா அபூபக்கர் ஆண்களுக்கான ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asian athletic championship today India won 3 gold medal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->