அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு..ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு.! - Seithipunal
Seithipunal


சீனாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹாங்ஷூ நகரில் செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆசிய விளையாட்டு போட்டியை ஒத்திவைப்பதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சீனாவில் செப்டம்பர் 10 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தற்போது கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் சற்று குறைந்த நிலையில், பல்வேறு தலைவர்கள் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.  உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், சீனாவில் செப்டம்பரில் நடக்கவிருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asian games 2022 postponed for covid


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->