ஆப்கான் வீரரை பேட்டால் அடிக்க முயன்ற பாகிஸ்தான் வீரர்.. ஐசிசி அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


மோதலில் ஈடுபட முயன்ற பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த சூப்பர் 4 சுற்று 4வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்து பாகிஸ்தான் அணிவெற்றி பெற்றது.

இதனையடுத்து பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது.

ஆசியகோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ஃபரீத் அகமதுவை, பாகிஸ்தான் அணி வீரர் ஆசிப் அலி, பேட்டால் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, இருவருக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா 25 சதவீதம் தொகையை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asif Ali and fareed Ahamed fined ICC


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->