தடகள வீரரை பாராட்டிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


மதுரையை சேர்ந்த செல்வ பிரபு (வயது 19). இவர் கடந்த ஆண்டு கொலம்பியாவில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். 

ஆசிய தடகள சம்மேளனத்தின் 50-வது ஆண்டு விழா வருகிற 10-ந் தேதி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற உள்ளது. 

இந்த விழாவில் சிறந்த வீரர் விருது வழங்கபடவுள்ளது. அதில் ஆசிய தடகள சம்மேளனத்தின் சிறந்த வீரராக தமிழகத்தை சேர்ந்த மும்முறை தாண்டுதல் (டிரிபிள் ஜம்ப்) வீரர் செல்வ பிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதனால் அந்த விருதை பெற்ற முதல் தமிழக வீரர் என்ற பெருமையை செல்வ பிரபு பெற்றுள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ''தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மென்மேலும் புதிய சாதனைகளை படைத்து தடகளப் பிரிவில் மேலெழுந்து வரும் செல்வபிரபுக்கு பாராட்டுகள்'' என, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

athlete praise best boy chief minister M.K. Stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->