முதல் முறையாக, புதிய அவதாரம் எடுக்கும் ரன் மெஷின் ஸ்டீவ் ஸ்மித்!  - Seithipunal
Seithipunal


அதிரடி ஆட்டத்திற்கும், அசாத்தியமான திறமையை வெளிப்படுத்துவதற்கும் பெயர் போன ஸ்டீவ் ஸ்மித் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க உள்ளதாக ஆஸ்திரேலிய அணி உறுதி செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்து விதமான ஆட்டத்திலும், ஸ்டீவ் ஸ்மித் இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியதில்லை.

மூன்றாவது இடம் முதல் ஒன்பதாவது இடம் வரை களம் இறங்கிய ஸ்டீவ் ஸ்மித், முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க உள்ளார்.

ஐபிஎல் போன்று ஆஸ்திரேலிய நாட்டில் நடந்து வரும் பிக் பாஸ் தொடரில், சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக ஆடிவரும் ஸ்மித், 56 பந்துகளில் 101 ரன்களையும், 66 பந்துகளில் 125 ரன்கள் என இரண்டு சதங்களை எடுத்து அசத்தியுள்ளார்.

இதன் எதிரொலியாக, ஆஸ்திரேலிய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டிருப்பதோடு, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராகவும் களமிறங்க உள்ளார்.

ஆஸ்திரேலிய டி20 அணியின் புதிய கேப்டன் மிட்செல் மார்ஷ் உடன் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க, ஆஸ்திரேலிய அணி தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 30ம் தேதி ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், வரும் ஆண்டு அமெரிக்கா - வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் டேவிட் வார்னருடன் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காராக களமிறங்குவார் என்றும் சொல்லப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AUS vs SA T20 2023 Steve Smith


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->