சிராஜின் வேகத்தில் வீழ்ந்த ஆஸ்திரேலியா... 469 ரன்களுக்கு ஆல் அவுட்..!! - Seithipunal
Seithipunal


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பௌலிங் தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறிய நிலையில் டேவிட்வாணன் 43 ரன்களுக்கு வெளியேறினார். 

ஆஸ்திரேலியா அணி 76 கண்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய நிலையில் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவீஸ் ஹெட் ஜோடி நிலைத்து ஆடியது. டிராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஸ்டீவன் ஸ்மித் பொறுமையாக ஆடியதால் முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 323 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. 

முதல் நாள் ஆட்டம் முடிவில் டிராவீஸ் ஹெட் 146 ரன்களுடனும் ஸ்மித் 95 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் இந்திய அணியின் பௌலங்கை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். 

நேற்று ஃபுல் லென்த் பந்துகளை வீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் இன்று பவுன்சர்களாக வீசியதால் ஸ்மித் மற்றும் ஹெட் இருவரும் தடுமாறினர். ஆஸ்திரேலியா அணி 361 ரன்கள் எடுத்த போது 163 ரன்கள் அவுடாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கேமரூன் கிரீன் 6 ரன்களுக்கும், ஸ்மித் 121 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர்.

இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் பொழுது ஆஸ்திரேலியா அணி 427 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஒற்றை இலக்கணங்களில் வெளியேற பொறுமையுடன் விளையாடிய அலெக்ஸ் காரி 48 ரன்கள் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்திய அணி தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா தனது பங்கிற்கு ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து களம் இறங்கி உள்ள இந்திய அணி விளையாடி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia team all out for 469 runs


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->