பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


24 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்ய அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது.

பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 4-ஆம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற உள்ளது. இரண்டாவது டெஸ்ட் கராச்சியிலும் 3-வது டெஸ்ட் லாகூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ராவல்பிண்டியிலேயே நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. வருகிற 27-ஆம் தேதி தனி விமானம் மூலம் இஸ்லாமபாத் செல்லும் ஆஸ்திரேலிய வீரர்கள், அங்கு ஹோட்டலில் ஒரு நாள் மட்டும் தனியே படுத்திக் கொண்டு உடனடியாக பயிற்சியை தொடங்க உள்ளனர்.

24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ஆஸ்திரேலிய அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி இருப்பதாகவும், இது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australian Cricket Board approves Pakistan tour


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->