T20 worldcup:- இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி.! - Seithipunal
Seithipunal


டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 17வது லீக் ஆட்டம், பார்படாசின் பிரிட்ஜ்டவுன் நகரில் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து, ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இதில், வார்னர் 16 பந்துகளில் 39 ரன்கள் குவித்த நிலையிழும், ஹெட் 18 பந்துகளில் 34 ரன்கள் குவித்த நிலையிலும் அவுட் ஆனார்.

அடுத்துவந்த கேப்டன் மிச்சேல் மார்ஷ் 35 ரன்களிலும், மேக்ஸ்வெல் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. 202 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். 

அதிரடியாக ஆடிய இருவரும் சிறப்பான தொடக்கம் அளித்தனர். சால்ட் 23 பந்துகளில் 37 ரன்கள் குவித்த நிலையில் சாம்பா பந்து வீச்சில் அவுட் ஆனார். கேப்டன் பட்லர் 28 பந்துகளில் 42 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்தை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

austrelia win t20 match against england


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->