#DAY1 : இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் போட்டி.. இந்தியா அபார பந்துவீச்சு.. வங்கதேசம் 227க்கு ஆல் அவுட்.! - Seithipunal
Seithipunal


இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு வங்கதேச அணி ஆல் அவுட் ஆகியுள்ளது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதலில் நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி தொடரை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில், வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில்  1-0 என முன்னிலையில் உள்ளது.

 அதனைத் தொடர்ந்து இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூர் மைதானத்தில் இன்று (டிசம்பர் 22 -டிசம்பர் 26) காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் போன்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியில் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு பதிலாக மேக பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணி சிறப்பாக தொடங்கினாலும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக வங்கதேச 73.5 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 4 விக்கெட்களும், உனத்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangladesh all out of 227 in 1st innings against India


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->