DAY3 : இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி.. வங்கதேச அணி நிதான ஆட்டம்.. வெற்றி பெறுமா இந்திய அணி?
Bangladesh need 471 runs against India in 1st test
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 513 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் முதலில் நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் தொடரை கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்தியா வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை சட்டகிராம் மைதானத்தில் நடைபெறநடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நேற்று 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்பிற்கு 404 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது.
இந்த நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் இழந்து வங்கதேச அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 254 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்களும், முகமது சிராஜ் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்துள்ளது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதேபோல் சத்தீஷ்வர் புஜாரா 52 இன்னிங்ஸ்களுக்கு பிறகு தனது 19 சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் வங்கதேச அணிக்கு 513 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் வங்கதேச அணி வெற்றி பெற 471 ரன்கள் தேவை. அதேபோல் இந்திய அணி 10 விக்கெட்களையும் கைப்பற்றினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதால் நாளை சிறப்பாக பந்துவீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Bangladesh need 471 runs against India in 1st test