பாண்டியா அணியில் இருந்து நீக்கம்!! பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


ஐசிசி உலகக் கோப்பை 17-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர் கொண்டதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினார்.

அதன் பிறகு ஹர்திக் பாண்டியா மீண்டும் தனது ஆட்டத்தினை தொடரவில்லை. இந்நிலையில் இந்திய அணியில் சில மாற்றங்களை கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 3 சுழப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. பின்னர் நடைபெற்ற ஆட்டங்களில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கி வருகிறது. 

இதற்கிடையில் நேற்று ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா வரும் ஞாயிற்றுக்கிழமையின் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா இடத்தை நிரப்பும் வகையில் மற்றொரு ஆல்ரவுண்டர் அஸ்வின் களம் இறங்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. 

மேலும் இந்திய அணியின் இடம்பெற்றுள்ள ஷர்துல் தாகூர் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பதால் அவரை நீக்கிவிட்டு முகமது ஷமியை மீண்டும் அணிக்குள் கொண்டு வரலாம் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் மற்றொரு அதிரடி பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் இருப்பதால் மூன்று பேருக்கும் இடையே இந்திய அணியின் இடம் பெறுவதில் போட்டி நிலவி வருகிறது. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் பல முக்கிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI announced Hardik Pandya removed from team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->