தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயண அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி தற்பொழுது மேற்கிந்திய தீவுகள் அணி உடனனா தொடரில் விளையாடி வருகிறது. மேலும் இந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. 

அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிசிசிஐ அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. வரும் டிசம்பர் 10, 12, 14 ஆகிய தேதிகளில் தென்னாப்பிரிக்காவுடன் டி20 போட்டிகளிலும், அதனைத் தொடர்ந்து டிசம்பர் 17,19, 21 ஆகிய தேர்தலில் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும், டிசம்பர் 26 மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதிகளில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI Releases South Africa tour schedule


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->