பி.சி.சி.ஐ யின் அதிரடி முடிவு...இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் இவரா ? - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் மோர்னே மோர்கல், இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வங்காளதேசத்திற்கு எதிராக இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது, வரும் செப்டம்பர் 19-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப்பும்,  உதவி பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட்டும் உள்ளனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த  முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் மோர்னே மோர்கல் தனது பயிற்சி அளிக்கும் பணியை தொடங்க உள்ளார். மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளதை, பி.சி.சி.ஐ. செயலாளர்

Jaysha

உறுதிப்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI s action decision Is this the bowling coach of the Indian team


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->