சீனா ஓபன் சர்வதேச டென்னிஸ் : சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் கோகோ காப்! - Seithipunal
Seithipunal


சீனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த கோகோ காப், 6-1, 6-3 என்ற நேர்செட்டில்  சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.  

சீனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைப்பெற்று வந்த நிலையில், இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 6-ம்நிலை வீராங்கனையான அமெரிக்காவை சேர்ந்த கோகோ காப், தரவரிசையில் 49-வது இடத்தில் இருந்த செக்குடியரசு நாட்டை சேர்ந்த கரோலினா முச்சோவாவை எதிர்கொண்டார்.

இதில் ஆட்டம் 1 மணி, 16 நிமிடத்தில் முடிவுக்கு வந்த நிலையில்,   தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தி வந்த கோகோ காப் 6-1, 6-3 என்ற நேர்செட்டில் முச்சோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.  

மேலும், சீனா ஓபனில் பட்டம் வென்ற 2வது அமெரிக்க வீராங்கனை என்ற பெருமை கோகோவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக, செரீனா வில்லியம்ஸ் 2004 மற்றும் 2013ல் இங்கு கோப்பையை வென்றுள்ளார்.  அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக கோகோ சர்வதேச அளவில் வென்ற 8வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China open international tennis coco cope won the title


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->