காலையில் டாக்டர் இராமதாஸ் வைத்த கோரிக்கை! மாலையில் ரத்து செய்து வந்த ஆர்டர்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்  கடந்த ஜூலை 26-ஆம் தேதி அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான  ( நேர்முகத்தேர்வு இல்லாதது)  போட்டித் தேர்வுகள்  வரும் 14-ஆம் தேதி முதல்  26-ஆம் தேதி வரை நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

அதில், சிவில் பொறியியல் பாடத்திற்கான தேர்வு நடைபெறும் அக்டோபர் 21-ஆம்  தேதியே,  மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு 2566 பொறியியல் சார்ந்த பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. 

இரு தேர்வுகளும் ஒரே கல்வித்தகுதியைக் கொண்டவை என்பதால் நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர்களால் எழுத்துத் தேர்வில் பங்கேற்க முடியாத நிலை உருவாகி இருந்தது. பொறியியலை அடிப்படையாகக் கொண்ட ஒரே மாதிரியான பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அண்ணா பல்கலைக்கழகம் என இரு அமைப்புகள் ஆள்தேர்வு நடத்துவது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். 

எனவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிகளுக்கு நேர்முகத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாவிட்டால் வரும் 21-ஆம் தேதி நடத்தப்படவுள்ள நேர்முகத் தேர்வை மட்டும் வேறு ஒரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தி இருந்தார்.

மேலும், இனிவரும் காலங்களில் இத்தகைய குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பொறியியல் பணிகளுக்கும் அரசுப் பணியாளர்  தேர்வாணையம் மூலமாகவே ஆள்தேர்வு நடத்த வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக 21.10.2024 அன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நடத்தும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டிய நாளில், இத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டிய நபர்கள் எவரேனும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பணித்தேர்வு அல்லது வேறு ஏதேனும் ஒன்றிய அரசு (அ) தமிழ்நாடு அரசு நடத்தும் எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டிய நிலை இருந்தால், அத்தகைய நபர்களின் வசதிக்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் மாற்றுத் தேதியில் நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளது. 

எனவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நேர்முகத் தேர்வு நடத்தும் நாள்களில் வேறு ஏதேனும் மத்திய அரசு அல்லது தமிழ்நாடு அரசு நடத்தும் எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் நபர்கள் இத்தேர்வுக்கான (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) பதிவு எண்ணுடன் (Register Number), தாங்கள் கலந்து கொள்ளும் பிற எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களுடன் dmamaws2024@gmail.com மின்னஞ்சல் முகவரியில், இந்நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள மாற்று தேதி கோரி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC Job Exam issue PMK Dr Ramadoss


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->