காமன்வெல்த் போட்டி நிறைவு விழா : இந்திய தேசிய கொடியை ஏந்தும் தமிழக சிங்கம்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இன்றுடன் முடிகிறது. 

இதில், குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ், நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து என மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 போட்டிகள் நடைபெற்றன. 

இந்த போட்டிகளில் 72 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பி.வி.சிந்து இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றார். 

இந்த நிலையில், காமன்வெல்த் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற உள்ளதால், இந்த நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச் செல்வதற்கு டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீரர் நிகாத் ஜரீன் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Commonwealth Games 2022 closing ceremony Indian national flag


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->