பிரபல கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்.! - Seithipunal
Seithipunal


பிரபல கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்.!

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஹென்றி ஒலோங்கோ சமூக ஊடகங்களில், "நீண்ட காலமாக கல்லீரல் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்த ஹீத் ஸ்ட்ரீக், சில வாரங்களுக்கு முன் உயிரிழந்ததாக பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த செய்தி பொய்யானது என்றும், ஹீத் ஸ்ட்ரீக் உயிருடன் இருப்பதாகவும் ஒலோங்கோ மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், ஹீத் ஸ்ட்ரீக் இன்று உயிரிழந்துள்ளதை அவரது மனைவி நாடின் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், "என் வாழ்க்கையின் மிகப்பெரிய அன்பும், என் அழகான குழந்தைகளின் தந்தையும், தனது கடைசி நாட்களைக் கழிக்க விரும்பிய அவரது வீட்டிலிருந்து தேவதூதர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல், ஹீத் ஸ்ட்ரீக் காலமான செய்தியை ஜிம்பாப்வே முன்னாள் சர்வதேச வீரர் ஜான் ரென்னியும் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஸ்டீக் அதிகாலையில் மாடபெலே லேண்டில் உள்ள அவரது பண்ணையில் காலமானார். 

அவர் தனது குடும்பத்தினர் மற்றும் அன்பானவர்களால் சூழப்பட்டிருந்தார். புற்றுநோயுடன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவர் நிம்மதியாக உயிரிழந்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cricket player heath streak passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->