கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் முக்கிய வீராங்கனையான மித்தாலிராஜின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் கதாபாத்திரத்தில் ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த டாப்ஸி  நடித்துள்ளார். ஆரம்பம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த  இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு 'சபாஷ் மிது' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cricketer mithali Raj biography 1st look release


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->