#CSK vs LSG : லக்னோவை பழிதீர்க்குமா சென்னை அணி..விலகிய முக்கிய வீரர்.!!
Csk vs lsg match
17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 39வது லீக் ஆட்டமான இன்று சென்னை அணியும் லக்னோ அணியும் மோதுகின்றன.
கடந்த ஏப்ரல் 19ம் தேதி சென்னை அணியும் லக்னோ அணியும் மோதின. அந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 6 விக்கெட்டை இழந்து 176 ரன்களை எடுத்தது. லக்னோ அணி 2 விக்கெட் இழந்து 19 ஓவரில் 180 அடித்து வெற்றி பெற்றது.
சென்னை அணி இந்த தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. லக்னோ அணி விளையாடிய இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றியும் 3 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.