முதல் ஆட்டத்திலேயே அபார வெற்றி - சென்னை சூப்பர் கிங்ஸின் அதிரடி ஆட்டம்.! - Seithipunal
Seithipunal


ஐ.பி.எல்- லின் 17வது கிரிக்கெட் தொடர் நேற்று ஆட்டம் பட்டத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. 

இதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடி இறுதியில் 18.4 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றிபெற்றது. 

இந்த வெற்றிக்கு ஷிவம் துபே 34 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் வழிவகுத்தனர். பெங்களூரு தரப்பில் அந்த அணியின் கிரீன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐ.பி.எல். தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றிபெற்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

csk won first match ipl 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->