மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு.. அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஏற்பட்ட சம்பவம்.!
Dog bite in Arjun Tendulkar hand
16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போதைய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இனிமேல் நடைபெறும் லீக் போட்டியும் மிகவும் முக்கியமாகும். இதில் தோல்வி அடையும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்.
அந்த வகையில் டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.
இந்த சீசனில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
அதேபோல், இதுவரை 12 போட்டிகளில் விளையாடி உள்ள லக்னோ அணி அணி 6 போட்டிகளில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் முடிவில்லை என 13 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 63வது லீக் போட்டியில் லக்னோ அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடி வருகிறார். தொடக்கத்தில் ஒரு சில போட்டிகளில் விளையாடிய அவர் அதன் பின்னர் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் கையில் நாய் கடித்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். அதன் காரணமாக இன்றைய போட்டியில் அவர் விளையாட மாட்டார். ஆனால் நாய் அவரை எங்கு எப்போது கடித்தது என்பது தெரியவில்லை.
English Summary
Dog bite in Arjun Tendulkar hand