சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் இணைந்த டுவைன் ப்ராவோ.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக டுவைன் ப்ராவோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.

இந்திய ரசிகர்களின் கவனம் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பி உள்ளது. மேலும் அதற்கான பணிகளை பிசிசிஐ-யும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி அன்று கொச்சியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தங்களுடைய அணியில் இருந்து விடுவிக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 

இதனையடுத்து ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட மற்றும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஆல்ரவுண்டரான டுவைன் ப்ராவோ  விடுவிக்கப்பட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 144 போட்டிகளில் விளையாடியுள்ள ப்ராவோ, 168 விக்கெட்டுகளும், 1556 ரன்களும் எடுத்துள்ளார். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை ஐபிஎல் கோப்பைகளை வெல்ல முக்கிய காரணமாக (2011, 2018, 2021) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2013 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக டுவைன் ப்ராவோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் இருந்த முன்னாள் வீரர் பாலாஜி சொந்தக் காரணங்களுக்காக ஒரு வருடம் விடுமுறை எடுத்துக்கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dwayne Bravo appointed Chennai super kings bowling coach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->