இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று நிறைவடைந்தது. இன்று முதல் சூப்பர்-12 சுற்றுக்கான போட்டிகள் ஆரம்பம் ஆகின்றன. சூப்பர்-12 போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்திய நேரப்படி மாலை 04:30 மணிக்கு ஆட்டம் துவங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை இழந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் ஜார்டன் 32 பந்துகளை எதிர்கொண்டு 32 ரன்கள் அடித்தார். அவரை அடுத்து உஸ்மர் கானி 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். மற்ற ஆப்கான் வீரர்களில் பெரும்பாலானோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கரன் 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரை அடுத்து பென்ஸ் ஸ்டோர்க் மற்றும் மார்க் வுட் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 113 என்ற எளிய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து 5 விக்கெட்டைகளை இங்கிலாந்து அணி இழந்தாலும் ரன் சேர்க்க தவறவில்லை. இங்கிலாந்து அணி 18.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 113 எட்டியது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபாரூக், முஜிப் உர் ரஹ்மான், ரஷித் கான், பரீத் அஹமத், முகமது நபி ஆகியோர் தல ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாம் கரனுக்கு வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England team won by 5 wickets


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->